சென்னை: சட்டப்பேரவையில் 110ஆவது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா படிப்பதைக் கேட்டுத் தீர வேண்டும் என்பது தமிழ் மக்களின் தலைவிதி என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை யில், விவசாயிகளின் கண் ணீரைத் துடைக்காத ஜெயலலிதா நெல் கொள்முதலைக் கணினி மயமாக்கி என்ன பயன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். "அதிமுக ஆட்சியிலே சட்டப்பேரவைக்காக புதிய இடம் கட்ட இடம் எல்லாம் பார்த்து புரோகிதரை அழைத்து பூசை எல்லாம் நடத்தினார்களே அப் போது அவர்களுக்கும் அந்தக் கட்சித் தலைமைக்கும் பேரவை நடைபெறும் இடம் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பேரவையாகத் தெரியவில்லையா?
"இங்கே இடம் போதவில்லை என்று கூறித்தானே வேறு இடம் பார்த்தார்கள்! திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தை கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டடம் என்கிறார் ஜெயலலிதா. தற்போது அதே கட்டடத்தில் மருத்துவ மனையை ஜெயலலிதா அமைத்தி ருக்கிறாரே; அதுமட்டும் அங்கே இருக்கலாமா?" என்றும் கருணா நிதி கேட்டுள்ளார். நிமிர்ந்து நிற்கின்ற கப்பல்கள் கவிழவும் நேரலாம்; தரை தட்டவும் நேரலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், கவிழ்ந்த கப்பல்கள் நிமிர வும் செய்யலாம்; பயணம் தொடர வும் செய்யலாம் என கூறியுள்ளார்.

