இந்தியாவுக்கு சீனாவின் பிரம்மாண்ட பேருந்து

இந்தியாவுக்கு சீனாவின் பிரம்மாண்ட பேருந்து

2 mins read
f2d94a28-040e-4b1e-bd3c-78214f186eae
-

புது­டெல்லி: சீனா அறி­மு­கப்­படுத்­தி உள்ள நவீ­ன­ரக டிராம் வடிவ பேருந்­து­களை இந்­தி­யா­வில் அறிமுகப்படுத்த பிர­த­மர் மோடி திட்டமிடுகிறார். இந்­தி­யா­வின் முக்கிய நக­ரங் களில் பெரு­கி­வ­ரும் போக்­கு­ வ­ரத்து நெரி­சலைக் குறைக்கும் வகையில் இந்த பேருந்து சேவையை இந்தியாவில் நடை­முறைப்­படுத்­து­வது குறித்து ஆய்வு செய்­யு­மாறு மத்திய சாலை போக்­கு­வ­ரத்­துத் துறையை அவர் கேட்­டுக் ­கொண்­டுள்ளார். 60.60 மீட்டர் நீளம், 7.80 மீட்டர் அகலம், 4.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த மெகா பேருந்­து­கள் பேட்­ட­ரி­க­ளால் இயங்­கும் வகையில் தயா­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. சராசரி சாலை­களின் ஓரமாக டிராம் தண்ட­வா­ளம் போன்ற இரும்புப் பாதையில் இந்த பேருந்து செல்­லும்­போது சாலை­களில் செல் லும் சிறிய வாக­னங்களை மோதா மல் ஏறி கடந்து செல்லும் வகை யில் இவை வடி­வமைக்­கப்­படும்.

சுரங்கப்­பாதை போன்ற வடி­வி­லான இந்தப் பேருந்­தின் தயா­ரிப்பு செலவு ஒரு சுரங்கப்­பாதையைக் கட்­டு­வதற்­கான செலவில் ஐந்தில் ஒரு பங்காக மட்டுமே இருக்­கும். இதில் ஒரே நேரத்­தில் 1,200 பேர்வரை பயணம் செய்­ய­லாம். ஒவ்வொரு நிறுத்­தத்­தி­லும் இந்தப் பேருந்துகள் நிற்­கும்­போது விமா­னத்­தில் இருப்­பதைப் போன்ற படிக்­கட்­டு­கள் பக்­க­வாட்­டில் இறங்­கும். அதன் வழியாக பய­ணி­கள் ஏறி, இறங்க­லாம். மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் இந்தப் பஸ், முதல்­கட்­ட­மாக சீனாவின் கின்­ஹு­வாங்­டாவ் என்ற இடத்­தில் அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் 300 மீட்டர் நீள­முடைய பாதையில் சோதனை ஓட்ட தடத்­தில் இயக்கி ஆய்­வு­கள் செய்­யப்­பட்­டன. இந்தப் பரி­சோ­தனை வெற்­றிக­ர­மாக அமைந்த­தாக சீன ஊட­கங்கள் தெரிவித்துள்ளன.