புதுடெல்லி: சீனா அறிமுகப்படுத்தி உள்ள நவீனரக டிராம் வடிவ பேருந்துகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த பிரதமர் மோடி திட்டமிடுகிறார். இந்தியாவின் முக்கிய நகரங் களில் பெருகிவரும் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த பேருந்து சேவையை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய சாலை போக்குவரத்துத் துறையை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 60.60 மீட்டர் நீளம், 7.80 மீட்டர் அகலம், 4.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த மெகா பேருந்துகள் பேட்டரிகளால் இயங்கும் வகையில் தயாரிக்கப்படவுள்ளது. சராசரி சாலைகளின் ஓரமாக டிராம் தண்டவாளம் போன்ற இரும்புப் பாதையில் இந்த பேருந்து செல்லும்போது சாலைகளில் செல் லும் சிறிய வாகனங்களை மோதா மல் ஏறி கடந்து செல்லும் வகை யில் இவை வடிவமைக்கப்படும்.
சுரங்கப்பாதை போன்ற வடிவிலான இந்தப் பேருந்தின் தயாரிப்பு செலவு ஒரு சுரங்கப்பாதையைக் கட்டுவதற்கான செலவில் ஐந்தில் ஒரு பங்காக மட்டுமே இருக்கும். இதில் ஒரே நேரத்தில் 1,200 பேர்வரை பயணம் செய்யலாம். ஒவ்வொரு நிறுத்தத்திலும் இந்தப் பேருந்துகள் நிற்கும்போது விமானத்தில் இருப்பதைப் போன்ற படிக்கட்டுகள் பக்கவாட்டில் இறங்கும். அதன் வழியாக பயணிகள் ஏறி, இறங்கலாம். மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் இந்தப் பஸ், முதல்கட்டமாக சீனாவின் கின்ஹுவாங்டாவ் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 300 மீட்டர் நீளமுடைய பாதையில் சோதனை ஓட்ட தடத்தில் இயக்கி ஆய்வுகள் செய்யப்பட்டன. இந்தப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

