சாலையோரம் மது குடித்த மூவர் கார் மோதி பலி

சாலையோரம் மது குடித்த மூவர் கார் மோதி பலி

1 mins read

திருப்பூர்: சாலையோரம் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த வர்கள் மீது கார் மோதியதில் மூவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர். திருப்பூர் மாவட்டம், முத் தூரில் இருந்து காங்கேயம் செல் லும் வழியில் மேட்டாங்காட்டு வலசின் அருகே சாலையோரம் டாஸ்மாக் கடை உள்ளது. முத்தூர் அருகே உள்ள தென்னங்கரைப்பாளையம் கரை வலசையைச் சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளர்களான மாரிமுத்து (55), எருக்கலங்காட்டுவலசை யைச் சேர்ந்த நடராஜ் (55), வரட்டுக்கரையைச் சேர்ந்த கருப்பண்ணன் (60), தெய்வ சிகாமணி (59) ஆகிய நால்வரும் சேர்ந்து மது வாங்கி டாஸ்மாக் கடைக்கு எதிரே இருந்த ஒரு பெட்டிக்கடையின் முன் மரத்தின் கீழ் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தராஜ், (50) என்பவர் மொபட்டில் அந்தப் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

திடீரென்று அவர் சாலை யோரம் உள்ள ஒரு கடைக்கு செல்வதற்காக தனது மொபட்டை வலதுபுறம் திருப்பியதாகத் தெரி கிறது. அந்த நேரம் முத்தூரில் இருந்து காங்கேயம் நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு கார் திடீரென்று கோவிந்தராஜ் மொபட்டின் மீது பலமாக மோதி யது. பின்னர் அதே வேகத்தில் சென்ற கார் சாலையோரம் இருந்த பெட்டிக்கடை, மது குடித்துக்கொண்டிருந்தவர்கள் மீதும் மோதியது. விபத்தில் மாரிமுத்து, நடராஜ், கருப்பண்ணன் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். விபத்தை ஏற் படுத்திய கார் ஓட்டுநர் அங் கிருந்து தப்பியோடி விட்டார்.