'காவிரிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும்'

'காவிரிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும்'

1 mins read

சென்னை: காவிரிப் பிரச்சினைக்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், காவிரி விவகா ரத்தில் மத்திய அரசு மேற்கொள் ளும் நடவடிக்கைகளுக்கு தமிழக, கர்நாடகா அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

"நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பின், பல்வேறு பிரச் சினைகளுக்குத் தீர்வு காணப் பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அங்கு புதிய அணை கட்டுவதற்கு, மத் திய அரசு அனுமதி வழங்கவில்லை. அதேபோல் காவிரிப் பிரச்சினைக் கும் தீர்வு காணப்பட வேண்டும்.

"கர்நாடகத்தில் இருந்து, காவிரியில் உரிய தண்ணீரைப் பெறுவது அவசியம். "அதே போல, மழைக் காலங்களில் கிடைக்கும் தண்ணீர் வழிந்தோடி, கடலில் சேருவதை தடுத்து நிறுத்தும் வகையில், தடுப்பணைகள் கட்டப்பட வேண் டும்," என்றார் பொன். ராதா கிருஷ்ணன்.