சென்னை: மத்திய அரசின் கல்விக் கொள்கையை எதிர்த்து சென்னையில் நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத் தில் திமுக, விடுதலை சிறுத் தைகள் கட்சியினரும் பங்கேற்ற னர். இந்நிகழ்வில் பேசிய சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்கவே இய லாது என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் துணைப் பொதுச்செயலா ளர் வன்னியரசு, புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு பாதக மான அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க இய லாது என விடுதலைச் சிறுத்தை கள் கட்சித் தலைவர் திருமா வளவன் கூறியிருந்தார். இந்நிலையில் திமுக கலந்து கொண்ட போராட்டத்தில் அவ ரது கட்சியும் பங்கேற்றுள்ளது. இதனால் அரசியல் அரங்கில் காட்சிகள் மாறக்கூடும்.

