ஐம்பது குழந்தைகளுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து

ஐம்பது குழந்தைகளுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து

1 mins read

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வரா மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பில்வரா மாவட்டத்தில் உள்ள ஆற்றின் மேம்பாலத்தை 50 பள்ளிக் குழந்தைகளுடன் பேருந்து ஒன்று கடக்க முயன்றது. அப்போது அந்தப் பேருந்து திடீரென ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் அனைத்துக் குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.