சென்னை: சேலத்திலிருந்து வந்த ரயிலில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக் கப்பட்டுள்ளது. சேலம் ஐ.ஓ.பி. வங்கியிலிருந்து ரூ.342 கோடி அளவுக்குப் பழைய நோட்டுகளை ஏற்றிக்கொண்டு ரயில் சென்னை நோக்கி ஆத்தூர், சேலம், விழுப்புரம் வழியாக வந்தது. 228 பணப்பெட்டிகள் கொண்ட அந்த விரைவு ரயிலில் மர்ம நபர்கள் நள்ளிரவில் உள்ளே இறங்கி சில பெட்டிகளை மட்டும் உடைத்துப் பல கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பணம் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம், ரயில் சென்னை வந்த பிறகே தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் ஓடும் ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது இதுவே முதல் முறை.
ரயிலில் பல கோடி ரூபாய் கொள்ளை
1 mins read

