புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நாடாளுமன்ற மக்கள வையில் கடந்த ஆண்டு மே மாதம் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் அந்த மசோதாவை நிறைவேற்ற கடந்த ஓராண்டாக மத்தியில் ஆளும் பாஜக அரசு முயன்றது. ஆனால் காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்ட தால் அதை நிறைவேற்ற இயலவில்லை. இதற்கிடையே காங்கிரஸ் தெரிவித்த சில திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் சரக்கு மற்றும் சேவை வரியை நிறைவேற்ற சுமூகமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் சரக்கு மற்றும் சேவை வரி நிறைவேற்றப்பட்டது. அதிமுகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் இந்தப் புதிய மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அடுத்த நிதி ஆண்டு முதல் இந்த மசோதா அமலுக்கு வர உள்ளது.
அமலுக்கு வந்தால் பண வீக்கம் அதிகரிக்கும். அது சாதாரண பொது மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்று பல்வேறு கட்சிகள் அச்சம் தெரிவித்தன. இதற்குப் பிரதமர் மோடி 42 நிமிடம் விளக்கம் அளித்துப் பதில் கொடுத்தார். "சரக்கு மற்றும் சேவை வரி நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் வரி தீவிரவாதத்தில் இருந்து நாம் விடுதலை பெற்றுள்ளோம். எனவே இந்த நாள் மிகவும் முக்கிய நாளாகும். இந்த மசோதா நிறைவேறியதை எந்த ஒரு கட்சிக் கும் கிடைத்த வெற்றி=தோல்வி யாகப் பார்க்க கூடாது. இது நம் நாட்டுக்குக் கிடைத்த வெற்றி. "நாடு முழுவதும் ஒரே மாதிரி வரி விதிப்பு முறை அமலுக்கு வர உள்ளதால் சிறு வணிகர்கள், நுகர்வோர்கள் அதிகம் பயன்பெறு வார்கள். ஏழைகளுக்குப் பாதிப்பு வராது. அதற்காகவே ஏழைகள் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மருந்துகளில் 55 விழுக்காடு இந்த வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படவில்லை.

