அதிபரை விட முதல்வருக்கு அதிக சம்பளம்

அதிபரை விட முதல்வருக்கு அதிக சம்பளம்

1 mins read

மும்பை: மராட்டிய மாநிலத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் அண்மையில் திருத்தம் செய்து உயர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பள உயர்வு விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. புதிய அறிவிப்பின்படி மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு மாதம்தோறும் ரூ.2.25 லட்சம் கிடைக்கும். இது அதிபர் பிரணாப் முகர்ஜி வாங்கும் சம்பளத்தையும் விட அதிகமானதாகும். அதிபர் பிரணாப் முகர்ஜி தற்போது மாதச் சம்பளமாக ரூ.1.50 லட்சம் பெற்று வருகிறார். துணை அதிபர் அன்சாரிக்கு மாதம் ரூ.1.25 லட்சம் மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது. மாநில கவர்னர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.1.10 லட்சம் சம்பளம் வாங்குகிறார்கள். இவர்கள் அனைவரையும் விட முதலமைச்சர் பட்னாவிஸ் அதிக சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.