புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர் முகமது இக்பால். எம்.எல்.சி.யாகப் பதவி வகித்த அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உத்தரப் பிரதேச மாநில அரசு குற்றம் சாட்டியது. முகமது இக்பால் மீது உத்தரப் பிரதேச மாநில அரசு பொதுநல வழக்குத் தொடர்ந்தது. "முன்னாள் எம்.எல்.சி. முகமது இக்பால் 100க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அந்த நிறுவனங்கள் மூலம் எந்த ஒரு செயல்பாடும் நடைபெறவில்லை. "ஆனால் அந்த நிறுவனங் களைக் கணக்குக் காட்டி ரூ.10,000 கோடிக்கும் மேல் அவர் சொத்து சேர்த்துள்ளார். அந்தப் பணத்தை வைத்து அவர் சட்ட விரோத பண பரிமாற்றமும் செய்கிறார். இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண் டும்," என்று புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஒரு முன்னாள் எம்.எல்.சி.யால் எப்படி 10,000 கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்க்க முடிந்தது என்று நீதிபதிகள் ஆச்சரியம் தெரி வித்தனர். இது தொடர்பாக அமலாக்கத் துறையும், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியமும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர விட்டனர். அந்த விசாரணை அறிக்கையை இரண்டு மாதங் களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முகமது இக்பால் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கெனவே சி.பி.ஐ.யிடமும் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் சி.பி.ஐ. தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்குத் தொடர்பாக அமலாக்கத் துறைக்குத் தேவையான எல்லா உதவிகளையும் சி.பி.ஐ. செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

