திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஏடிஎம் மையத் தில் ரகசிய நவீன கருவி பொருத்தி லட்சக்கணக்கில் பணம் திருட்டு போன சம்பவத்தில் 3 வெளிநாட்டு வாலிபர்களைக் கைது செய்ய போலிசார் நட வடிக்கை எடுத்து வருகின் றனர். நவீன கருவிகளை ஏடிஎம் மையத்தில் பொருத்தி அதன்மூலம் வங்கி வாடிக்கையாளர் களின் ரகசிய எண்களைப் பதிவு செய்து, போலி ஏடிஎம் கார்டுகளைத் தயாரித்து லட்சக்கணக் கில் பணத்தைத் திருடி யுள்ளனர் வாலிபர்கள். அவர்கள் ருமேனியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ் டின், மரியன், புளோரியன் என்பதும் கோவளத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்ததும் தற்போது தலைமறைவான தும் தெரியவந்துள்ளது.
ஏடிஎம் மையத்தில் லட்சக்கணக்கில் பணம் திருட்டு
1 mins read

