பாலாறு தடுப்பணையைத் தடுக்க அன்புமணி கோரிக்கை

பாலாறு தடுப்பணையைத் தடுக்க அன்புமணி கோரிக்கை

1 mins read
047da59f-ce34-42bc-b44d-957d7f0ce621
-

சென்னை: பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப் பணை கட்டுவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என பாமக இளைய ரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய அவர், இப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படாவிட்டால் தமிழகத் தில் இது சட்டம் ஒழுங்கு பிரச் சினையாக மாற வாய்ப்பு உள் ளது என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, மூன்று முக்கிய பிரச்சினைகள் குறித்த மனுக்களை பிரதமரிடம் அளித் ததாகக் கூறினார். "முதல் மனு பாலாறு பிரச்சினை தொடர்பானது. ஆந்திர மாநில அரசு 33 கிலோ மீட்டர் தூரத்தில் 22 தடுப்பணைகளை கட்டி உள்ளது. கூடுதலாக 7 தடுப்பணைகளை கட்ட ஏற்பாடு கள் செய்து வருவதுடன், ஐந்து தடுப்பணைகளின் உயரத்தை யும் உயர்த்தி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்படுவ துடன், 1 கோடி பேருக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்று பிர தமரிடம் விளக்கி கூறினேன்," என்றார் அன்புமணி.