சென்னை: இளம் பெண் சுவாதி படுகொலை வழக்கில் மேலும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. சுவாதியைக் கொன்றது ராம் குமார் அல்ல என்றும், உண்மை யான குற்றவாளியின் பெயர் முத்துக்குமார் என்றும் தமிழச்சி என்பவர் கூறியுள்ளார். இது சாதிக்காக நடத்தப்பட்ட ஆணவக் கொலை என்றும் அவர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பரபரப்பு நிலவுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் தமிழச்சி, தமது பதிவில் பல் வேறு அதிர்ச்சி தரும் தகவல் களை வெளியிட்டுள்ளார்.
சுவாதியைக் கொன்ற குற்ற வாளி முத்துக்குமார் தற்போது தஞ்சையில் பாதுகாப்பாக உள் ளார் என்றும், அவருக்கு சுவாதி யின் சித்தப்பா பாதுகாப்பு அளித்துள்ளதாகவும் தமிழச்சி தெரிவித்துள்ளார். "சுவாதி படுகொலை செய் யப்பட்ட அன்றைய பரபரப்பான தினத்திலேயே அவரைக் கொன்றது பிலால் என்ற இஸ்லாமிய இளைஞர் என்று பொது ஊடகங்களில் இந்துத் துவ அமைப்பைச் சேர்ந்த சிலரால் வதந்தி பரப்பப்பட்டது. இது இஸ்லாமிய வெறுப்பு அரசியலாகும். இவை அனைத்தும் திட்டமிட்டே இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டன.
"ராம்குமார் கழுத்தை அறுத்தது காவல்துறையுடன் வந்திருந்திருந்த அடியாட்கள் என்பது பொது ஊடகங்களில் மக்கள் நலம் விரும்பிகளால் அம்ப லப்படுத்தப்பட்டதும், சுவாதியின் கொலை விசாரணை தடுமாற ஆரம்பித்தது. அவசர அவசரமாக இந்துத்துவ அமைப்பு ராம்குமாரை விடு விக்க வேண்டும் என்று அவர் களைச் சார்ந்த வழக்கறிஞரை அனுப்பி அதுவும் பல விவாதங்களால் முறியடிக்கப்பட்டது," என்று தமிழச்சி கூறியுள்ளார்.

