தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகப்பேறு விடுப்புக் காலம் 26 வாரமாக அதிகரிப்பு

2 mins read

புதுடெல்லி: அரசாங்கத் துறை களில் மட்டுமின்றி தனியார் நிறு வனங்களில் பணிபுரியும் பெண் களுக்கான மகப்பேறு விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங் களாக உயர்த்த வகை செய்யும் மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்ற மேல வையில் வியாழக்கிழமை நிறை வேற்றப்பட்டது. மசோதா தொடர்பில் நடந்த விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசினார் அமைச்சர் தத்தாத்ரேயா. "உலகில் அதிக அளவில் மகப்பேறு விடுமுறை அளிக்கும் நாடுகளில் கனடா (50 வாரம்) முதலிடத்திலும் நார்வே (44 வாரம்) இரண்டாம் இடத்திலும் உள்ளன.

"இந்த மசோதா சட்டமானால் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம்," என்றார். மகப்பேறு விடுப்புக் காலம் 26 வார காலமாக நீட்டிக்கப்படுவ தோடு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கும் பிறரிடம் இருந்து குழந்தையைத் தத்தெடுக்கும் பெண்களுக்கும் குழந்தையைப் பராமரிப்பதற்காக மூன்று மாத கால மகப்பேறு விடுப்பு வழங்கு வதும் 50 அல்லது அதற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் குழந்தைகள் காப் பகத்தை கட்டாயம் அமைப்பதும் இந்தப் புதிய சட்டத் திருத்தத்தில் அடங்கும்.

போதிய அளவில் பேறுகால விடுப்பு வழங்காததால் பிறந்த குழந்தைகள் தாய்ப்பாலின்றி ஊட் டச்சத்து குறைபாடுகளுக்கு ஆளா வது, பெண்கள் பணிக்கு வருவ தில் சிக்கல் நிலவி வருகின்றன. இதையடுத்து, அனைத்துப் பெண்களின் மகப்பேறு விடுப்பை 8 மாதங்கள் வரை உயர்த்த வேண் டும் என மத்திய பெண்கள், குழந் தைகள் நலத்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான மேனகா காந்தி வலியுறுத்தி வந்தார். இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறைக்குப் பரிந்துரையும் அனுப்பப்பட்டது. இதை ஏற்று மகப்பேறு விடுப்பு சட்டத்தில் மாற்றங்கள் செய்ய தொழிலாளர் நலத்துறை முடிவு செய்தது. இந்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மேலவை யில் தாக்கல் செய்து பேசினார்.