'பூங்கொத்து பெறுவதை நிறுத்தினால் ரூ.1.5 கோடி மிச்சமாகும்'

'பூங்கொத்து பெறுவதை நிறுத்தினால் ரூ.1.5 கோடி மிச்சமாகும்'

1 mins read
bccaa8f2-a90a-411a-90e8-5579983a58f4
-

புதுடெல்லி: ம.பி. மாநிலத்தைச் சேர்ந்த ஆசிஷ் ஆனந்த் என்ற இளைஞர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள யோசனையில் "உங்களுக்கு தினமும் ஏராளமான பூங்கொத்துகள் வழங்கப்படுகிறது. நீங்கள் பூங்கொத்து பெறுவதை நிறுத்தினால் 1.5 கோடி ரூபாய் மிச்சமாகும்," என்று கூறியுள்ளார். இந்தியாவின் 70-வது சுதந்திர தினம் வருகிற 15-ஆம்தேதி நாடெங்கும் கொண்டாடப்பட உள்ளதைத் தொடர்ந்து, பிரதமர் தனது உரையின் போது பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

பொது -மக்களும் இதுதொடர்பான கருத்துகளை மோடிக்கு அனுப்பலாம் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.