விருத்தாசலம்: ஓடும் ரயிலில் பணம் கொள்ளை போன விவ காரத்தில் வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக பாதுகாப்புப்படை ஆணையர் தெரிவித்துள்ளார். சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் வங்கிப் பணம் ரூ.5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. சேலம்-=விருத்தாசலம் இடையே பணம் கொள்ளை போயிருக்கலாம் என்று போலிசார் கருதுவதால் ரயில்வே பாதுகாப்புப் படையின் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸ் துணை சூப்பிரண்டு பன்னீர் செல் வம் தலைமையிலான குழுவினர் விருத்தாசலம்-=சேலம் இடையே யான வழித்தடத்தில் டிராலியில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுப்பணியில் கொள் ளையர்கள் விட்டுச்சென்ற தடயங் கள் ஏதும் சிக்கவில்லை.
இந்நிலையில், ரயில்வே பாது காப்புப் படையின் திருச்சி கோட்ட ஆணையர் செந்தில் குமரேசன் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பணம் கொள்ளைபோன ரயில் நிறுத்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ததுடன் அப்போது பணியில் இருந்தவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினார். பின்னர் விருத்தாசலம் ரயில்வே பாதுகாப்புப் படை போலி சாரிடமும் கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். - "திருச்சி கோட்ட போலிசார் சம்பவ நாளன்று அவர்கள் பணியை செவ்வனே செய்துள்ள னர். விருத்தாசலம் போலிசார் ரயில் வந்தவுடன் வழக்கமாகப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது எந்தவிதமான சம்பவங் களும் நடக்கவில்லை என கூறுகிறார்கள்.
"விருத்தாசலத்திற்கு அடுத்து விழுப்புரத்தில்தான் ரயில் நின்றது. விருத்தாசலம், விழுப்புரத்தில் ரயில் நின்றபோது பணம் இருந்த ரயில் பெட்டியின் சீல் உடைக்கப்படவில்லை என்பதை போலிசார் உறுதிசெய்துள்ளனர். "அத்துடன் இந்த வழித்தடத் தில் கொள்ளை நடக்க வாய்ப் பில்லை. சேலத்தில் புறப்படுவதற்கு முன் நடந்திருக்கலாம். அல்லது சேலம்-=விருத்தாசலம் இடையில் நடந்திருக்கலாம். ஆனால் விருத் தாசலத்தில் இருந்து சென்னை வரை மின்கம்பிகள் செல்வதால் கொள்ளை நடந்திருக்க வாய்ப் பில்லை. அத்துடன் சென்னைக்கு ரயில் அதிகாலை 3.30 மணிக்கு சென்று சேர்ந்துவிட்டதால் அங்கு நடந்திருக்க அதிகம் வாய்ப் புள்ளது.

