பேருந்து-வேன் மோதியதில் 12 பேர் பலி

பேருந்து-வேன் மோதியதில் 12 பேர் பலி

1 mins read

மணப்பாறை அருகே ஆம்னி பேருந்தும் வேனும் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோர் மணப்பாறை, திருச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டியை அடுத்த மணற்கேணி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு வேனில் திருச்சி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள முப்புலியான் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றனர். அப்போது காரணிப்பட்டி விலக்கு ரோடு அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எழுவர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. படம்: ஊடகம்