மும்பை: சிறுநீரகங்களை திருடி மோசடி செய்ததாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் தலைமை நிர்வாகி உட்பட ஐந்து மருத்துவர்களை கடந்த வாரம் நள்ளிரவில் மும்பை போலிஸ் கைது செய்தது. கைதான மருத்துவர்களில் வீனா ஸ்வேலிக்கர், சுவின் ஷெட்டி இருவரும் உள்ளூர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரின் பிணை மனுவையும் நிராகரித்தது.
இந்நிலையில், கைதான ஐந்து மருத்துவர்களும் நேற்று மும்பையில் உள்ள டின்டோஷி அமர்வு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கும்படி நீதிபதி காஜா பரூக் அஹமது உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

