கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கி பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. டெங்கி பாதித்து சிகிச்சை பெற்று வந்த 58 வயது நபர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வடக்கு 24 பர்கனாஸ் பகுதியைச் சேர்ந்த நபர் டெங்கி பாதித்து என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலை யில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதனால், டெங்கி உயிரிழப்பு 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 189 பேர் டெங்கி பாதித்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல் கள் தெரிவிக்கின்றன.
டெங்கிக்கு 15 பேர் பலி
1 mins read

