புதுடெல்லி: விமானிகள் குடி போதையில் இருந்தால் ஓராண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய விமானிகளில் பலர் ஏர்இந்தியா மற்றும் தனியார் விமான நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். விமானப் போக்குவரத்து விதி களின்படி விமானத்தை இயக்கு வதற்கு 12 மணி நேரத்திற்கு முன்னதாக விமானிகள் மது அருந்தி இருக்கக்கூடாது. இதற்காக, 'பிரீமினைட் ஆல் கஹால்' என்ற சோதனை நடத் தப்படுகிறது. இந்தச் சோதனையில் விமா னிகள் உள்ளிட்ட பல விமான ஊழியர்கள் பலர் பிடிபட்டு வரு கிறார்கள். இவர்களுக்கு தற் போது மூன்று மாத இடைநீக்கம், 5 ஆண்டுகளுக்கு விமானம் ஓட்டும் உரிமம் ரத்து மற்றும் சம்பளம், இதரபடிகள் நிறுத்தம் போன்ற தண்டனைகள் அளிக் கப்படுகின்றன.
இதுபோன்று மதுபோதையில் இருக்கும் விமானிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் தண் டனையைக் கடுமையாக்க மத்திய விமானப் போக்குவரத்து அமைச் சகம் முடிவு செய்து தீவிர ஆலோசனை நடத்தியது. இறுதியாக, வேலைக்கு வரும் விமானிகள், விமான ஊழியர்கள் குடிபோதையில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை அல் லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த தகவலை சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் மூலம் விமானிகள் மீதான குற்றங்கள் முதல்முறையாக போலிஸ் விசாரணைக்கு உட்படுத்த வகை செய்யப் படுகிறது.

