ஐந்து சிறு மாநிலங்களில் நிதி முறைகேடு

ஐந்து சிறு மாநிலங்களில் நிதி முறைகேடு

1 mins read

புதுடெல்லி: யூனியன் பிரதேசம் என்று அழைக்கப்படும் சண்டிகர், அந்தமான் நிகோபர், லட்சத்தீவுகள், டாமன்-டையூ, தாத்ரா= நகர் ஹவேலி ஆகிய சிறு மாநிலங்களின் 2014-15ஆம் ஆண்டுக்கான நிதிநிலை விவரங்களை சிஏஜி அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அதுதொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த யூனியன் பிரதேசங்களின் நிர்வாகக் கணக்குகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ள தாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள் ளது. அதுமட்டுமன்றி, சம்பந்தப்பட்ட யூனியன் பிரதேச அரசுகள் முறையான நிதி மேலாண்மை நட வடிக்கைகளைக் கையாள வில்லை என்றும் அந்த அறிக்கை யில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநில அரசு களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.