புதுடெல்லி: சீனாவிலிருந்து ரூ.13,853 கோடிக்கு மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகிறது என மத்திய இணை அமைச்சர் மன்சுக் எல்.மண்டவியா தெரிவித்தார். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் மன்சுக் எல்.மண்டவியா மக்களவை யில் கூறுகையில், "கடந்த 2015=16ஆம் நிதியாண்டில் இந்தியா 21,217 கோடி ரூபாய் மதிப்பிற்கு மருந்து தயாரிப்பிற் கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. "இதில் சீனாவில் இருந்து 65 விழுக்காடு அதாவது 13,853 கோடி ரூபாய் மதிப்பிற்கு மருந்து தயாரிப் பிற்கான மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது 2014-15ஆம் நிதியாண்டில் 12,757 கோடி ரூபாய்; 2013-14ஆம் நிதியாண்டில் 12,061 கோடி ரூபாய் என்ற அளவில் இருந் தது. பொருளாதார சூழலைக் கருத் தில் கொண்டு மருந்து மூலப் பொருட் கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப் படுகின்றன. மருந்து தயாரிப்பிற்கான மூலப்பொருட்களுக்கு சீனாவைச் சார்ந்திருப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் சில வகை மருந்துகளின் மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு மீண்டும் சுங்க வரி விதிக்கப்பட் டுள்ளது," என்றார் அவர்.
ரூ.13,853 கோடி சீன மருந்துகள் இறக்குமதி
1 mins read

