சிகிச்சை பெறும் தந்தையைக் கொல்ல முயன்ற பெண்

சிகிச்சை பெறும் தந்தையைக் கொல்ல முயன்ற பெண்

2 mins read

சென்னை: சொத்துகளுக்காகப் பெற்ற தந்தையைக் கொல்ல முயன்ற பெண் மருத்துவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவாகியுள்ளது. அவர் தனது தந்தை சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்குச் சென்று, அங்கு தந்தையின் உட லில் பொருத்தப்பட்டிருந்த உயிர் காக்கும் கருவிகளைப் பிடுங்கி விடும் காட்சிகள் ரகசிய கேமராக் களில் பதிவானதையடுத்து அவரது செயல் அம்பலமானது. சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 83 வயதான ராஜகோபால் கடந்த ஆண்டு இருதயக் கோளாறு காரணமாக தனது மகனுக்குச் சொந்தமான மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டி ருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மருத் துவமனைக்கு வந்தார் ராஜகோபா லின் மகள் ஜெயசுதா. இவரும் மருத்துவர் ஆவார்.

இவரது இரு மகன்களும் உடன் வந்திருந்தனர். அப்போது நடந்தவை அனைத்தும் மருத்துவ மனையின் கேமராவில் பதிவாகி உள்ளது. சம்பவத்தன்று தனது தந்தை யின் அறையில் இருந்த செவிலி யர்களை வெளியே செல்லுமாறு பணிக்கும் ஜெயசுதா, பின்னர் தனது மகன் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த பத்திரங் களை எடுத்துத் தரச் சொல்கிறார். பிறகு அப்பத்திரங்களில் தந் தையின் கட்டை விரல் ரேகையைப் பலவந்தமாகப் பதிகிறார். இதை யடுத்து கொடூரத்தின் உச்சமாக தந்தையின் உடலுடன் பொருத்தப் பட்டுள்ள உயிர் காக்கும் கருவி களைப் பிடுங்கி எறியும் அவர், திடீரென அங்கு வரும் மருத் துவரைக் கண்டு அதிர்ச்சியடை கிறார். பின்னர் மருத்துவரிடம் ஏதோ பேசுபவர், அங்கிருந்து வேகமாக வெளியேறுகிறார்.

இந்தக் காட்சிகள் ராஜகோபால் அனுமதிக்கப்பட்டுள்ள அறையில் வைக்கப்பட்டுள்ள ரகசிய கேமரா வில் அப்படியே பதிவாகியுள்ளது. இதையடுத்து ஜெயசுதாவின் சகோதரர் ஜெயப்பிரகாஷ், போலி சில் அவர் மீது புகார் அளித்துள் ளார். அவர் மருத்துவத் தொழில் பார்க்க தடை விதிக்கும்படியும் இந்திய மருத்துவ கவுன்சிலில் மனு தந்துள்ளார். ஜெயசுதா, அவரது மகன்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவாகியுள்ளது. கொலை முயற்சி சம்பவம் நடந்த 2 மாதங்களில் ராஜகோபால் காலமாகிவிட்டார். விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக காணொளிக் காட்சியை போலிசார் தாமதமாக வெளியிட்ட தாகக் கூறப்படுகிறது.