வங்காள விரிகுடா கடல்பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஐந்து இந்திய மீனவர்கள் மாண்டனர். இரண்டு மீனவர்கள் உயிரு டன் மீட்கப்பட்ட நிலையில் மேலும் பத்துப் பேரைத் தேடும் பணி தொடருகிறது. மகா கௌரி என்னும் பெயர் கொண்ட அந்த ஆழ்கடல் மீன் பிடிப் படகு நேற்று முன்தினம் பிற்பகலில் தலைகுப்புறக் கவிழ்ந் ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கும் பங்ளாதேஷிற் கும் இடைப்பட்ட சுந்தரவனப் பிரதேசத்தின் ஹிரோன் பாய்ண்ட் டிலிருந்து கிட்டத்தட்ட 40 கடல் மைல் தூரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்து நிகழ்ந்தபோது கடல் நீர் கொந்தளிப்பாக இருந்தது என்று கப்பற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மீன்பிடிப் படகு மூழ்கியபோது அதனருகே சென்ற கப்பல் ஒன்றி லிருந்து அபய சமிக்ஞை செய்யப் பட்டதாக அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து பங் ளாதேஷ் கப்பற்படையைச் சேர்ந்த கப்பல்களும் சுற்றுக்காவல் விமா னங்களும் படகைத் தேடும் வேலையில் ஈடுபட்டதாகவும் அவர் சொன்னார். கவிழ்ந்து மூழ்கியபோது அந்தப் படகில் 17 பேர் இருந்ததை பங்ளாதேஷ் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் தபுஷி ரபேயா உறுதிச் செய்தார்.

