கண்களில் துணி கட்டிப் போராட்டம்

கண்களில் துணி கட்டிப் போராட்டம்

1 mins read

நாகை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டிக்கொண்டு விவசாயிகள் நடத்திய போராட்டம் நாகப்பட்டினத்தில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. 'விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் கண் திறக்க வேண்டும்' என்ற முழக்கத்துடன் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.