தொடர் பயிலரங்குகள்: கட்சியைப் பலப்படுத்த திருமாவளவன் நடவடிக்கை

தொடர் பயிலரங்குகள்: கட்சியைப் பலப்படுத்த திருமாவளவன் நடவடிக்கை

1 mins read
cb1b0aac-3dde-4b2a-9c44-7f53e12817b9
-

சென்னை: தேர்தல் தோல்விக்குப் பின்னர் கட்சியைப் பலப்படுத்தும் பணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தீவிரமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்ட வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருப்பதாகவும் இதையடுத்துக் கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளையும் நேரில் அழைத்து அவர் கலந்தாலோசனை நடத்தி வருவதாகவும் தெரிகிறது. "தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுக்குத் தற்போது அவர் வகுப்பெடுத்து வருகிறார்.

கட்சியின் மீது உள்ள ஈடுபாட்டால், பலரும் முழுநேர அரசியலுக்கு வந்துள்ளனர். அத்தகையவர்கள் அரசியல், சமூக, பொருளியல் விவரங்களை நன்கு அறிந்திருந்தால்தான் கட்சி மேலும் வளரும் எனத் திருமாவளவன் நினைக்கிறார். அதற்காக தொடர் பயிலரங்கங்களை நடத்த அவர் முடிவு செய்துள்ளார்," என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.2016-08-15 06:00:00 +0800