ராமநாதபுரம்: தடையை மீறி மாட்டுவண்டி பந்தயம் நடத்திய 13 பேரை ராமநாதபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். தொண்டி அருகே வெள்ளையபுரம் - எஸ்.பி.பட்டினம் சாலையில், மருங்கூர், புதுக்கோட்டை, கல்லணை, கடலாடி உட்பட பல பகுதியை சேர்ந்தவர்கள் மாட்டுவண்டி பந்தயம் நடத்த நேற்று முன்தினம் சோதனை ஓட்டம் நடத்தினர். தடையை மீறி நடந்த இந்த பந்தயம் குறித்து தகவலறிந்த போலிசார் அங்கு சென்றனர். அப்போது நெய்னா முகம்மது, ஆறுமுகம், முத்துராமலிங்கம், ராகுல்காந்தி உட்பட 13 பேர் மாட்டுவண்டி பந்தயத்தில் பங்கேற்றிருப்பது தெரியவந்தது.
மாட்டு வண்டிப் போட்டி நடத்திய 13 பேர் கைது
1 mins read

