பதவியால் வந்த மதிப்பு: அமைச்சரின் சுவாரசிய பேச்சு

பதவியால் வந்த மதிப்பு: அமைச்சரின் சுவாரசிய பேச்சு

1 mins read

திருச்சி: அமைச்சர் பதவி வந்த பிறகே தனது மனைவி உள்ளிட்ட பலரும் தம்மை மதிப்பதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். அதிமுகவில் சாதாரண வட்டப் பிரதிநிதியாக இருந்த தமக்கு, தம் உழைப்பைக் கண்டு முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் பதவியை அளித்திருப்பதாக திருச்சியில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் தெரிவித்தார்.

"முன்பெல்லாம் கட்சிப் பணிக்குச் செல்லும் சமயங்களில், 'இவருக்கு வேறு வேலையே இல்லை' என்று சொன்ன மனைவியும் கூட இப்போது அமைச்சர் ஆனதும் வரவேற்பு தருகிறார். சைரன் கார், பாதுகாப்புக்கு போலிஸ், கார் கதவைத் திறந்து விட ஆள், மரியாதை என எல்லாம் கிடைக்க, முதல்வர் ஜெயலலிதாதான் காரணம். "ஆகையால், மகளிர ணியினர் உள்ளாட்சித் தேர்தலில் கடின உழைப்பை வெளிப்படுத்துங்கள். உங்களுக்கான பதவிகள் தானாகத் தேடி வரும்," என்றார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். அதிமுகவில் மட்டுமே கடைநிலைத் தொண்டராக இருப்பவரும் கூட அமைச்சராக முடியும் என்று குறிப்பிட்ட அவர், திமுகவில் அப்படி ஒருவர் கூட பதவி பெற இயலாது என்றார்.