தமிழகத்தில் மக்களை மீட்கும் ஆட்சி அமையவில்லை: விஜயகாந்த்

தமிழகத்தில் மக்களை மீட்கும் ஆட்சி அமையவில்லை: விஜயகாந்த்

2 mins read
a662f485-e922-41e1-8db7-86646ed576db
-

சென்னை: விடுதலை பெற்று ஆண்டுகள் பல கடந்தாலும் மக்க ளின் வறுமை நிலை மாறவில்லை என தேமுதிக தலைவர் விஜய காந்த் கவலை தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தில் வறுமை யிலிருந்து மக்களை மீட்கும் ஆட்சி அமையவில்லை என்று கூறியுள்ளார்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்கின்ற நிலையை தமிழகத்தில் உருவாக்க தேமுதிக தொடர்ந்து பாடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், லஞ்சம், ஊழல், வேலை யில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, சட்டம் ஒழுங்கு எனப் பல்வேறு பிரச்சினைகளில் மக்கள் சிக்கித் தவிப்பதாகத் தெரிவித்துள்ளார். "அண்டை நாடுகளின் அச்சுறுத்தல், எல்லைப் புறங்களில் எதிரிகளின் தாக்குதல், தமிழக மீனவர்கள் தாக்குதல், உள்நாட் டில் தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை இந்தியா இன்னும் சந்தித்து வருகிறது. "வரும் காலங்களில் நாட்டில் அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட்டு, வறுமை ஒழிந்திட, இந்த சுதந்திரதினம் வழிவகுக்கட்டும்," என விஜயகாந்த் மேலும் கூறி உள்ளார்.

இதற்கிடையே தமது பிறந்த நாளன்று கட்சியினருக்கு பிரி யாணி விருந்து வழங்கவும், கூடவே உள்ளாட்சித் தேர்தல் குறித்து கருத்து கேட்கவும் விஜய காந்த் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. பிறந்தநாள் நிகழ்வுக்காக பணம் செலவிட தேமுதிக நிர்வா கிகள் தயங்குவதாக அண்மையில் செய்தி வெளியானது. இந்நிலை யில், தனது சொந்த செலவில் பிறந்த நாளைக் கொண்டாட, விஜயகாந்த் முடிவு செய்துள்ள தாகத் தெரிகிறது. "குறைந்தபட்சம் 5,000 பேருக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட வேண்டுமென அவர் நினைக்கிறார். இதன் மூலம் கட்சி பலமாக இருப்பதைக் காட்ட அவர் விரும்புகிறார்.

"மேலும் இம்முறை ஏழைக ளுக்கு கூடுதல் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கட்சித் தலைமை திட்ட மிட்டுள்ளது. இதன் மூலம் தேர்த லில் தோல்வி கண்டாலும் தேமு திக சார்பிலான மக்கள் நலப் பணிகளில் தொய்வு ஏற்பட வில்லை என எதிர்த் தரப்பின ருக்கு அவர் காட்ட விரும்புகிறார்," என விவரமறிந்த தேமுதிக நிர்வாகிகள் சிலர் கூறுகின்றனர். ஆக மொத்தத்தில் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறார் விஜயகாந்த்.