சிதம்பரம்: இனி மது அருந்தப் போவதில்லை என கிராம இளையர்கள் பலர் உள்ளூர் கோவிலில் சத்தியம் செய்தனர். சிதம்பரம் அருகே உள்ளது நஞ்சமகத்து வாழ்க்கை கிராமம். இங்கு சுமார் 3,000 பேர் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தில் சில இளையர்கள் மது அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந் துள்ளனர்.
இதனால் வருத்தம டைந்த இந்த ஊரைச் சேர்ந்த மது அருந்தும் பழக்கம் உள்ள இளை யர்கள் 150 பேர் விரதம் இருந்து, காமாட்சி காளி யம்மன் கோவிலுக்குப் பால் காவடி எடுத்து 'மது குடிப்பதில்லை' என்று அம்மன் முன்பு உறுதிமொழி எடுப்பது என முடிவு செய்தனர். அதன்படி 10 நாட்க ளுக்கு முன்பு காப்பு கட்டி விரதம் இருந்தனர். இந்நிலையில் சனிக்கிழ மையன்று 150 இளைஞர் களும் பால் குடம் எடுத்து, செடல் காவடி குத்திக்கொண்டு ஊர் வலமாக வந்தனர். பின்னர் அனைவரும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு உறுதிமொழி எடுத்தனர்.
விரதம் இருந்து கோவிலில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட 150 இளையர்கள். படம்: ஊடகம்

