மோடி சுதந்திர தின உரை நிகழ்த்திய வேளையில் காஷ்மீரில் தாக்குதல்: இரு பயங்கரவாதிகள் கொன்று ஒழிப்பு

மோடி சுதந்திர தின உரை நிகழ்த்திய வேளையில் காஷ்மீரில் தாக்குதல்: இரு பயங்கரவாதிகள் கொன்று ஒழிப்பு

2 mins read

இந்தியா நேற்று அதன் 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி யது. டெல்லி செங்கோட்டையில் சம்பிரதாயபூர்வமாக தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி முன்னேற்றம் குறித்து பல்வேறு அம்சங்கள் தொட்டுப் பேசினார். வேற்றுமையில் ஒற்றுமை என் பதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலம் என்று சுட்டிய அவர் நாட்டில் வன்முறைகளுக்கும் அட்டூழியங்களுக்கும் இடமில்லை என்றார். பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என் றும் மாவோயிசம் போன்ற இயக் கங்களுக்காக ஆயுதம் ஏந்திய இளையர்கள் அதைக் கைவிட்டு தேசத்தோடு ஒன்றிணைய வேண் டும் எனவும் அழைப்பு விடுத்தார். இந்திய சுதந்திர தினத்திற்கு சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம், பிரதமர் லீ சியன் லூங் ஆகியோர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதாக சிங் கப்பூர் வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியா=சிங்கப்பூர் உத்தி பூர்வ பங்காளித்துவம் ஒத்துழைப் புக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று அதிபர் டோனி டானும் இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகாலத் தோழமை வலுவான வரலாற்றுப் பின்னணியில் உருவானதாக பிரதமர் லீயும் தங்களது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டனர். இதற்கிடையே, டெல்லியில் மோடி உரை நிகழ்த்திக்கொண்டி ருந்த அதேவேளை காஷ்மீரில் பயங் கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட தாக செய்திகள் தெரிவித்தன. ஸ்ரீநகரின் நௌகாத்தா என் னும் மத்திய ஆயுதப்படையினர் மீது பயங்கரவாதிகள் சரமாரி யாக துப்பாக்கிச் சூடு நடத்தி யதில் ஒரு ராணுவ வீரர் உயிரி ழந்தார். ஆறு வீரர்கள் படுகாயமடைந் தனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறதென மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்தத் தாக்கு தலுக்குப் பதிலடியாக ராணுவப் படை துப்பாக்கியால் சுட்டதில் பயங்கரவாதிகள் இருவர் கொல் லப்பட்டனர். அப்பகுதியில் பதற் றம் நீடிக்கிறது.