மதுரை: காவல்துறை உதவி ஆய்வாளரின் தோள்பட்டையை கடித்த அதிமுக கவுன்சிலரின் மகன் கைதானார். மதுரை, மாடக்குளம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் கடந்த சனிக் கிழமை திருவிழா நடந்தது. அப்போது 75ஆவது வார்டு கவுன்சிலர் முனியம்மாளின் மகனான 29 வயது முத்துக்கருப் பன், பொது மக்களுக்கு பல வகையிலும் இடையூறுகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதை அப்பகுதி காவல்துறை ஆண் உதவி ஆய்வாளர் முத்துக்காமாட்சி கண்டித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. அப்போது ஆவேசமடைந்த முத்துக்கருப்பன், உதவி ஆய்வாளரின் தோள் பட்டையைக் கடித்துள்ளார். புகாரின் பேரில் முத்துக்கருப்பன் கைது செய்யப்பட்டார்.
காவல்துறை உதவி ஆய்வாளரின் தோள் பட்டையைக் கடித்தவர் கைது
1 mins read

