126 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கைக்கு இடைக்கால தடை

126 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கைக்கு இடைக்கால தடை

1 mins read

சென்னை: வழக்கறிஞர் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில் 126 வழக்கறிஞர்களுக்கு எதிரான பணி இடைநீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து இந்திய வழக்கறிஞர் மன்றம் (பார் கவுன்சில்) நேற்று உத்தரவிட்டது. ஜூலை 25ஆம் தேதி உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதாக வழக்கறிஞர்கள் அறிவித்தனர். அதன்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 126 வழக்கறிஞர்கள் மீது வழக்கறிஞர் மன்றம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், வரும் 22ஆம் தேதிக்கு பிறகு வழக்கறிஞர்கள் மீதான தடையை முழுவதுமாக நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அதற்குள் 126 பேரின் நன்னடத்தை குறித்த விவரங்களை வெளியிடவும் வழக்கறிஞர் மன்றம் உத்தரவிட்டது.