கோவை: கிணற்றில் இறங்கி செல்ஃபி (தம்படம்) எடுக்க முயன்ற பள்ளி மாணவர் அதில் தவறி விழுந்து பலியானார். இச்சம்பவம் கோவையில் நிகழ்ந்தது. சவுரிபாளையத்தில் உள்ள ஜி.வி.குடியிருப்புப் பகுதியில் 120 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இதில் 70 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் ஹரீஷ் என்பவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் நால்வருடன் இந்த கிணற்றைக் காண வந்துள்ளார். பின்னர் நண்பர்கள் கிணற்றின் அருகே நின்று தம்படம் எடுத்துள்ளனர். ஹரீஷ் மட்டும் கிணற்றின் படிக்கட்டில் சில அடி தூரம் இறங்கி நின்று படமெடுக்க முயற்சித்தபோது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். உயிருக்குப் போராடிய அவரை நண்பர்களால் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தேடியும் ஹரீஷின் சடலத்தை மீட்க முடியவில்லை.
கிணற்றுக்குள் இறங்கி செல்ஃபி எடுக்க முயன்ற மாணவர் பலி
1 mins read

