திருச்சி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டால் தடையை மீறி இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தும் என்று அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு காளைகள் தான் தமிழர்களின் மூத்த பிள்ளை என்றார். "ஜல்லிக்கட்டு, தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டு. ஆனால் ஜல்லிக்கட்டு குறித்து ஏதும் தெரியாமல், புரியா மல் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மனம் போல பேசி வருகிறார்," என்றார் அர்ஜூன் சம்பத்.
ஜல்லிக்கட்டு: அர்ஜூன் சம்பத் எச்சரிக்கை
1 mins read

