'சங்கரமூர்த்தியை எதிர்க்கும் ஜெயா, நீதிபதி கவுடாவை எதிர்க்காதது ஏன்?'

'சங்கரமூர்த்தியை எதிர்க்கும் ஜெயா, நீதிபதி கவுடாவை எதிர்க்காதது ஏன்?'

1 mins read
b8b3b189-2445-4eac-95e1-e34fa82bc57a
-

சென்னை: ஆளுநர் நியமனம் தொடர்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் (படம்) கேள்வி விடுத்துள்ளார். அவர் விடுத் துள்ள அறிக்கையில், தமிழக ஆளுநராக கர்நாடகாவின் சங்கர மூர்த்தியை எதிர்க்கும் ஜெய லலிதா, காவிரி வழக்கில் கர்நாடகா நீதிபதி கோபால் கவுடா நியமனத்தை ஏன் எதிர்க்க வில்லை? எனக் கேட்டுள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு வரை தமிழக ஆளுநராக நிய மிக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியிருப்பதாகச் சுட்டிக் காட்டி உள்ள அவர், காவிரி நதிநீர் வழக்கில் இத்தகைய நடவடிக் கையை மேற்கொள்ளவில்லை என விமர்சித்துள்ளார்.

"காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விடாததால் தமிழக விவ சாயிகளுக்கு ஏற்பட்ட ரூ.2,500 கோடி நஷ்டஈட்டை தரக்கோரி, தமிழக அரசு கடந்த 2013ல் வழக்கு தொடுத்தது. இம்மனுவை கர்நாடகாவைச் சேர்ந்த உச்சநீதி மன்ற நீதிபதி கோபால் கவுடா அடங்கிய அமர்வு விசாரிப்பதற்கு தமிழக அரசு ஏன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை? "முதல்வர் ஜெயலலிதா இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் எதிர்பார்க் கின்றனர்," என்று விஜயகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.