ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றி செல்லாது என பெண் வழக்கறிஞர் வழக்கு

ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றி செல்லாது என பெண் வழக்கறிஞர் வழக்கு

1 mins read
3859684d-3de7-4f5e-8daa-2daf67df0488
-

சென்னை: முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து லாவண்யா என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதையடுத்து அவரது மனுவுக்கு பதில் அளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆர்.கே., நகர் தொகுதியில் களமிறங்கிய ஜெயலலிதா, திமுக வேட் பாளர் சிம்லா முத்துசோழனை விட 39,545 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி கண்டார். இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதி வாக்காளரான வழக்கறிஞர் லாவண்யா என்பவர் ஜெயலலிதாவின் இந்த வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதீமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம் 4 வாரத்துக்குள் பதிலளிக்க ஜெயலலிதா, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.