நீதிமன்றத்தில் கையெழுத்திட திடீரென மறுத்த ராம்குமார்

1 mins read
8acd6d27-064c-4ab0-9baa-dd9939c4b634
-

சென்னை: கையெழுத்து மாதிரிகளை ஒப்பிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு ராம்குமார் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம்பெண் சுவாதி கொலை வழக்கில், கைதாகி உள்ள ராம்குமாருக்கு எதிரான ஆதாரங்களை காவல்துறையினர் வலுப் படுத்தி வருகின்றனர். சுவாதியை படுகொலை செய்ய ராம்குமார் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாள், கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கண்டெடுக்கப் பட்டது. அதில் இருந்த ரத்த மாதிரியை ஆய்வு செய்தபோது அது சுவாதியுடையது என தெரிய வந்தது. இதையடுத்து கொலை நடந்தபோது, ராம்குமார் அணிந்தி ருந்த சட்டையில் இருந்த ரத்த மாதிரியை ஆய்வு செய்தனர்.

ராம்குமார் தங்கியிருந்த தங்கு விடுதியின் பதிவுப் புத்தகத்தில் அவரது கையெழுத்து காணப்பட் டது. எனவே, அவரது கையெ ழுத்து மாதிரிகளை எடுத்து ஒப் பிட போலிசார் முடிவு செய்தனர். இதற்காக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து அனுமதி யும் பெற்றனர். ராம்குமாரின் கையெழுத்து மாதிரியை பெறும் நடவடிக்கையை, நீதிமன்ற வளாகத்திலேயே மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதித்தது. அதன்படி நேற்று முன்தினம் எழும்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு ராம்குமாரை அழைத்து வந்து நீதிபதி முன்பு போலிசார் முன்னி லைப்படுத்தினர். ஆனால், ராம் குமார் கையெழுத்து போட மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. மேலும், சூளைமேட்டில் உள்ள தங்குவிடுதியின் விண்ணப்பத் தில் தாம் கையெழுத்திடவில்லை என்று ராம்குமார் கூறியதாகவும் தெரிகிறது.