33 லட்சம் வழக்குகள் தேக்கம்

33 லட்சம் வழக்குகள் தேக்கம்

1 mins read

புதுடெல்லி: தேசிய நீதித்துறை தகவல் கட்டமைப்பு (என்ஜே டிஜி) வியாழக்கிழமை புள்ளிவிவர அறிக்கை ஒன்றை வெளி யிட்டது. அதில், "நாடு முழுவதும் சுமார் 3 கோடி வழக்கு கள் தேக்கமடைந்துள்ளன. அவற்றில் உச்ச நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை 33 லட்சத்து 57 ஆயிரத்து 575 வழக்குகள் அடுத்த விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் நிலுவையில் உள்ளன.

"இதில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள் ளன. நீதிபதிகளின் பற்றாக்குறை காரணமாக நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.