டெல்லியில் வேகமாகப் பரவும் டெங்கி

டெல்லியில் வேகமாகப் பரவும் டெங்கி

1 mins read

புதுடெல்லி: டெல்லியில் டெங்கி நோயைச் சமாளிக்க தீவிர ஏற் பாடுகள் செய்யப்பட்டு வருகின் றன. அங்கு இதுவரை 277 பேருக்கு டெங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வும் இந்த மாதத்தின் முதல் இரு வாரங்களில் டெங்கியால் 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. கொசுக்கடியினால் டெங்கி நோய் பரவுகிறது. கடந்த ஆண்டு மழைக்காலப் பருவத்தில் டெல்லி யில் 15,867 பேருக்கு டெங்கி பாதிப்பு ஏற்பட்டது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அள வாகும்.

டெங்கி கண்டு கடந்தாண்டு 60 பேர் பலியானார்கள். இந்த ஆண்டு டெங்கி பரவு வதைத் தடுக்க உரிய முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் இந்தாண்டு வழக் கத்துக்கு முன்பாகவே டெங்கி காய்ச்சல் பரவியது. அதாவது மே மாதம் முதல் டெங்கி தாக்கு தலுக்கு உள்ளானோர் மருத்துவ மனைக்கு வரத் தொடங்கினர். மே மாதத்தில் 6 பேரும் ஜூன் மாதத்தில் 15 பேரும் பாதிக்கப் பட்டனர். டெல்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 21 வயது இளம்பெண் கடந்த ஜூலை மாதம் டெங்கிக்கு முதல் பலியானார். ஜூலையில் 91 பேருக்கு டெங்கி அறிகுறிகள் இருந்தன.