சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவும் தனது மனைவியும் நெருக்கமாகப் பழகியதாக அதிமுக மக்க ளவை உறுப்பினரான சத்தியபாமாவின் கணவர் வாசு கூறியுள் ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், அதிமுக எம்பிக்கள் சசிகலா புஷ்பா, மல்லிகா பரமசிவம், சத்தியபாமா, திருச்சி சிவா உள்ளிட்ட பலர் தாங்கள் சார்ந்துள்ள கட்சியை மறந்து மிக நெருக்கமாக இருந்ததாகச் சாடியுள்ளார். "சசிகலா புஷ்பாவைப் போல் என் மனைவி குறித்தும் முதல்வருக்கு எல்லா விவரங்க ளும் ஒருநாள் தெரியவரும். அப்போது சசிகலா புஷ்பாவைப் போன்று சத்தியபாமா மீதும் நடவடிக்கை பாயும்," என வாசு தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டு அதிமுக வட்டாரங்க ளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தன் கணவர் கூறுவது அனைத்துமே பொய் என சத்தியபாமா கூறிள்ளார்.
அதிமுக நாடாளுமன்ற பெண் எம்பி மீது கணவர் பரபரப்புப் புகார்
1 mins read

