அனைத்துக் கட்சிக் கூட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்து

அனைத்துக் கட்சிக் கூட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்து

1 mins read

சென்னை: காவிரி பிரச்சினை குறித்து தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு உரிய முறையில் தலையிடவில்லை எனக் குறை கூறியுள்ளார். "மத்திய அரசை நிர்ப்பந்திக்கும் வகையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தவேண்டும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் பிரதமரைச் சந்திக்க வேண்டும்," என ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.