சென்னை: காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி வெகுதூரம் வந்து விட்டதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தானும் தனது ஆதரவாளர்களும் மீண்டும் காங்கிரசில் இணையும் பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாகக் கூறினார். "தமிழ்நாட்டில் காங்கிரஸ் என் றால் அது தமிழ் மாநில காங்கிரஸ் தான் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். "உள்ளாட்சித் தேர்தல் கூட் டணி குறித்து, தேர்தல் அறிவிப் புக்குப் பிறகுதான் முடிவு செய்யப் படும். பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் வழியில் பயணித்துக்கொண்டிருக்கிறோம்," என்றார் வாசன். உயிரோட்டமுள்ள முன்னணி இயக்கமாக தமாகா உருவாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமகா குறித்து சிலர் வதந்தி பரப்பு வது கண்டிக்கத்தக்கது என்றார்.
உடல் நலம் குன்றியுள்ள காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி நலமடைய வாழ்த்தி அவருக்கு அண்மையில் வாசன் கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே தமாகா, காங்கிரசு டன் இணைய உள்ளதாகத் தகவல் பரவியது. இதற்கிடையே காங்கிரசுடன் இணைவதைத் தவிர வாசனுக்கு வேறு வழியே கிடையாது எனத் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங் கோவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

