சென்னை: தனது மனைவியை சட்டப்பேரவை உறுப்பினராக்கும் நோக்கத்துடன் கொள்ளையடித்த வரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் கொள்ளையடித்த வீட்டில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளால் அவர் போலிசாரிடம் சிக்கினார். வேலூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகாவில் உள்ள சுத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி சுவீதா. பேரணாம்பட்டு ஒன்றிய தேமுதிக கவுன்சிலராக உள்ள தனது மனைவியை எப்படியாவது எம்எல்ஏ ஆக்க வேண்டும் என்பது கணேஷின் லட்சியமாக இருந்துள் ளது. சுற்று வட்டார மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, பொதுக் காரியங்களுக்கு நன் கொடையும் அளித்தால் எம்எல்ஏ ஆக முடியும் என சிலர் அவருக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
இதையடுத்து ஆம்பூர் வட்டாரத்தில் பணத்தை வாரியிறைக்கத் தொடங்கினார் கணேஷ். நன்கொடை என எந்த ஊரிலிருந்து ஆட்கள் தேடி வந்தாலும், தட்டிக் கழிக்காமல் முடிந்ததைச் செய்துள்ளார். இதற்காக அதிகளவு பணம் தேவைப்படவே, சத்தமின்றி தனது கூட்டாளியுடன் அடிக்கடி சென்னை வந்து, பல வீடுகளில் புகுந்து கொள்ளையடித்துள்ளார் கணேஷ். அண்மையில் சென்னை, விரு கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் 82 வயதான குமாரதேவன் என்ப வரது வீட்டிலும் இவர் கைவரிசை காட்டினார். அச்சமயம் மாநகராட்சி அதிகாரி எனத் தம்மை அறிமுகம் செய்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்த கணேஷ், வீடு தொடர்பான சில ஆவணங்களைச் சரிபார்ப்பதுபோல் நடித்துள்ளார்.
அவர் வந்து சென்ற 2 நாட்களுக்குப் பிறகே வீட்டுப் பீரோவில் இருந்த 45 பவுன் நகைகள் காணாமல் போனதை அறிந்தார் குமாரதேவன். அவர் அளித்த புகாரையடுத்து போலிசார் விசா ரணை நடத்தி வந்தனர். குமாரதேவன் வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதி வான காட்சிகளைப் பார்வையிட்ட போது, அதில் கணேஷ் கொள்ளை யடித்தது தெரியவந்தது. பின்னர் அவரை வலைவீசிப் பிடித்தனர். விசாரணையின் போதே தனது மனைவியை எம்எல்ஏ ஆக்க வேண்டும் என்ற வேகத்தில் இவ்வாறு கொள்ளையடித்ததாக அவர் கூறியுள்ளார். அவர் சென்னையில் முகாமிட்டு பல வீடுகளில் கைவரிசையைக் காட்டி வந்துள்ளார். மனைவியை சட்டப்பேரவைக்கு அனுப்ப விரும்பியவர் இப்போது சிறை சென்றுள்ளார்.

