களைகட்டும் கோவை புத்தகக் கண்காட்சி

களைகட்டும் கோவை புத்தகக் கண்காட்சி

1 mins read
8f0a9dde-99a3-41ee-883a-89586bf21a48
-

கோவையில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில் இரண்டே நாட்களில் 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள புத்த கங்கள் விற்பனையாகி உள்ளன. கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 170 பதிப்பாளர்கள், 90 விற்பனையாளர்கள் சார்பில் 260 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. வரலாறு, இலக்கியம், நாவல்கள் என பல்வேறு தலைப்புகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய கண்காட்சி வரும் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மக்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதாகவும் முதல் 2 நாட்களில் 9 லட்சம் ரூபாய் அளவுக்கு புத்தகங்கள் விற்பனையானது என்றும் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.