லஞ்சம் தர அணுகாதீர்: எம்எல்ஏ அறிவிப்பு

லஞ்சம் தர அணுகாதீர்: எம்எல்ஏ அறிவிப்பு

1 mins read
0851d735-248c-4272-817d-a5eb9f1e1873
-

நாகை: எத்தகைய சூழ்நிலையிலும் லஞ்சம் வாங்கப்போவதில்லை என நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறியுள் ளார். எனவே தம்மிடம் யாரும் அன்பளிப்பு கேட்டு வர வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தது மனிதநேய ஜனநாயக கட்சி. அதன் பொதுச்செயலர் தமிமுன் அன்சாரி நாகை தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் நேர்மையாகவும் எளிமையாகவும் பணி யாற்றவே தாம் அரசியல் களத்துக்கு வந்திருப்ப தாகக் கூறியுள்ளார். ஒருபோதும் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் தாம் ஈடுபடப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், சட்டப்பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையில் தொகுதி மக்கள் தம்மிடம் எதிர்பார்க்கும் பணிகளை நிறைவேற்ற கடமைப் பட்டுள்ளதாகத் தெரி வித்துள்ளார். "நன்கொடைகள், அன்பளிப்புகள் ஆகியவற் றுக்காக என்னை அணுகு வதை தவிர்க்க வேண்டும். தொகுதி மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கவும் கடமைகளை நிறைவேற்றவும் எப்போதும் பாடுபடுவேன்," என தமிமுன் அன்சாரி மேலும் கூறியுள்ளார். அவரது இந்த அதிரடி அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.