சென்னை: சுவாதி படுகொலைக்குத் தேவையான கூலிப்படையை ஏற்பாடு செய்தது பாஜக பிரமுகர் எனக் குற்றம்சாட்டி பிரான்சை சேர்ந்த தமிழச்சி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அண்மைய சமூகவலைத்தளப் பதிவில் அப்பிரமுகர் தஞ்சையைச் சேர்ந்த பாஜகவின் மாநில இளைஞரணிச் செயலாளர் 'கருப்பு (எ) முருகானந்தம்' என்ற அவர்தான் ராம்குமாரையும் சுவாதி வழக்கிற்குள் கொண்டு வந்தவர் என்று குற்றம்சாட்டி உள்ளார்.
"உண்மையில் ராம்குமார் வெறும் பலி ஆடு. கருப்பு மீது கொலை உட்பட 38 வழக்குப் பதிவுகளும் அதில் 20 வழக்குகள் விசாரணையிலும் உள்ளன. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டு பிரதமர் மோடி இவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது தனிக்கதை," என்று தமிழச்சி கூறியுள்ளார்.

