கோவை: கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக் குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரி வில் சேர்க்கப்பட்டு அனைவருக் கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் வளாகத்தில் அமைந்துள்ள விடுதியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வரு கின்றனர். இந்த நிலையில் நேற்றுக் காலை மாணவிகளுக்கு அடுத்தடுத்து உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சுமார் 50க்கும் மேற் பட்ட மாணவிகளுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டதால் கல்லூரி நிர்வாகம் அவர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்தது.
மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உடல் நலம் பாதிக்கப் பட்டதற்கான காரணம் தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு இதே கல்லூரி விடுதியில் உள்ள தண்ணீர்த் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் சுகாதாரமற்ற தண்ணீர் விநியோகிக்கப்பட்டதால் இதே பாலிடெக்னிக் மாணவிகள் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றனர்.

