சென்னை: தமிழக வழக் கறிஞர்கள் 126 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை அகில இந்திய வழக்கறிஞர்கள் மன்றம் மீட்டுக் கொண்டுள்ளது. முன்னதாக வழக்கறிஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் கொண்டு வந்த திருத்தத்தை எதிர்த்துத் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு கட்டமாக நீதி மன்றத்தை கடந்த மாதம் 25ஆம் தேதி வழக்கறிஞர்கள் முற்றுகை யிட்டனர். ஆனால் முற்றுகைப் போராட் டம் நடத்தக்கூடாது என்று மன்றம் எச்சரித்தும் வழக்கறி ஞர்கள் பொருட்படுத்தவில்லை. இதனால் போராட்டத்தை முன்னின்று நடத்தும் வழக் கறிஞர்கள் அறிவழகன் உட்பட 126 வழக்கறிஞர்களை மன்றம் இடைநீக்கம் செய்து உத்தர விட்டது. இதையடுத்து நடந்த பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் 126 வழக்கறிஞர் களுக்கு எதிராகப் பிறப்பிக்கப் பட்ட இடைநீக்க உத்தரவை திரும்பப்பெறுவதாக அகில இந்திய வழக்கறிஞர்கள் மன்றம் நேற்று அறிவித்தது.
126 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் மீட்பு
1 mins read

